சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: சிதைந்த வன நிலங்களை மீட்டெடுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 6:40PM by PIB Chennai
ஒருங்கிணைந்த நிலப்பரப்பு அணுகுமுறையின் மூலம் சிதைந்த காடு மற்றும் காடு அல்லாத நிலப்பரப்புகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல் திட்டத்தின் (NAPCC) கீழ் பசுமை இந்தியா இயக்கம் (GIM) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-16 முதல், இந்த இயக்கத்தின் மூலம் 17 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 1,84,467 ஹெக்டேர் நிலப்பரப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற பசுமைப் பரப்பையும் சுற்றுச்சூழல் நன்மைகளையும் மேம்படுத்துவதற்காக, 2020-21 முதல் 2026-27 வரையிலான காலகட்டத்தில் 600 நகர வனங்களையும் 400 நகர தோட்டங்களையும் உருவாக்கும் நகர வனத் திட்டத்தையும் (NVY) அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்த நகர வனங்கள் பசுமைப் பரப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதுடன், காற்றின் தரம் மற்றும் நுண்-காலநிலையை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட சுற்றுச்சூழல் சொத்துக்களையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை இந்தியா இயக்கத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட செயல்பாடுகளுக்காக, சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், சிக்கிம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களுக்கு, 2026-27 நிதியாண்டில் இதுவரை ரூ. 57.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297279®=3&lang=1
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297432)
வருகையாளர் எண்ணிக்கை : 37