எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் விநியோக நிறுவனங்களின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 5:40PM by PIB Chennai

மின்சாரம், மத்திய-மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறையாகும். எனவே, நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகித்தல், மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற நடவடிக்கைகள் அந்தந்த மாநில அரசு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் மின் விநியோக நிறுவனங்களின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. நிதி ரீதியாக நிலையான, செயல்பாட்டுத் திறன் கொண்ட மின் விநியோகத் துறையின் மூலம் மின் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்குத் துணைபுரிந்து வருகிறது.

இத்திட்டங்களில் டிசம்பர் 2014-ல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டம், 2015-ல் நிறுவப்பட்ட தேசிய ஸ்மார்ட் கிரிட் இயக்கம், தற்போது ஜூலை 2021-ல் தொடங்கப்பட்ட சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் துறைத் திட்டம் ஆகியவை அடங்கும்.

ஒருங்கிணைந்த மின் உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 58,686 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டம், 'மறுசீரமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு, சீர்திருத்தத் திட்டத்தை உள்ளடக்கியதாக அமைந்திருந்ததுடன், மின் விநியோகத் துறையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் உதவியது. இப்பணிகளில் நிறுவன வளத் திட்டமிடல், 59 நகரங்களில் 1,414 நகரங்களில் நிகழ்நேரத் தரவு சேகரிப்பு அமைப்பு, 6.54 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுதல் ஆகியவை அடங்கும். இத்திட்டம் மார்ச் 2022-ல் நிறைவடைந்தது.

மேம்படுத்தப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற பணியாளர்கள் குறித்த மாநில வாரியான வெளியிடப்பட்ட விவரங்களின் படி, பயிற்சி பெற்ற பணியாளர்கள்களின் எண்ணிக்கை 884-ஆக உள்ளது.

மத்திய மின்சாரத் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் இன்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297225&reg=3&lang=1

(Release ID: 2297225)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297395) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी