அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வங்காள விரிகுடாவின் வட பகுதிக்கு மேல் அசாதாரணமான ஓசோன் படலத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 5:02PM by PIB Chennai

வங்காள விரிகுடா வட கடற்பகுதிக்கு மேல் உள்ள வளிமண்டலத்தின் மேல் பகுதியில், வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான ஓசோன் படலம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு, காற்று நீரோட்டங்கள் எவ்வாறு ஸ்ட்ராடோஸ்பியர் (வளிமண்டலத்தின் ஒரு அடுக்கு) வழியாக ஓசோனைக் கொண்டு செல்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.

சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சி பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்கும் ஓசோன் படலம், பொதுவாக 25 முதல் 30 கி.மீ உயரத்தில் அதிகபட்ச செறிவை அடைகிறது. இந்தியப் பிராந்தியத்திற்கு மேலே உள்ள ஸ்ட்ராடோஸ்பியரில் ஓசோன் பரவலை வளிமண்டல சுழற்சி மற்றும் இயக்கவியல் செயல்முறைகள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதிலும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு சோதனையை மேற்கொண்டனர். இதில் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமான 'ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம்' முக்கியப் பங்காற்றியுள்ளது. பூமிக்கு மேலே ஓசோன் படலத்தின் நகர்வுகள் குறித்த விரிவான தகவல்களைப் பெற, நாடு தழுவிய வளிமண்டல ரேடார்கள், வானிலை பலூன்கள், செயற்கைக்கோள்கள், மேம்பட்ட வளிமண்டல மாதிரிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகள் இந்தச் சோதனையில் பயன்படுத்தப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297177&reg=3&lang=1

(Release ID: 2297177)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297388) வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी