ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலத்தடி நீர் நுகர்வு மற்றும் அதன் தரம் குறித்த ஆய்வறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 4:47PM by PIB Chennai

மத்திய நிலத்தடி நீர் வாரியம், மாநில அரசுகளுடன் இணைந்து நடத்திய ஆய்வின்படி, நாட்டின் மொத்த நிலத்தடி நீர் பயன்பாடு 60.63 சதவீதமாக உள்ளது. ஆண்டுதோறும் 449 பில்லியன் கன மீட்டர் நிலத்தடி நீர் மீண்டும் சேர்கிறது. இதில் 247 பில்லியன் கன மீட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. மொத்த பயன்பாட்டில் 87 சதவீதம் விவசாயப் பாசனத்திற்கும், 11 சதவீதம் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும், 2 சதவீதம் தொழிற்துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், சண்டிகர் மற்றும் கர்நாடகா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலத்தடி நீர் பயன்பாடு தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

நாட்டின் நிலத்தடி நீர் பொதுவாகக் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளது. மேலும், 99 சதவீத இடங்களில் நிலத்தடி நீர் பாசனத்திற்கு ஏற்றதாக உள்ளது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், தூய்மையான குடிநீர் வழங்கவும் 'ஜல் ஜீவன் இயக்கம்' மூலம் நாட்டில் இதுவரை 15.90 கோடி (82%) கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 'ஜல் சக்தி அபியான்', 'மழைநீரைச் சேகரிப்போம்' இயக்கம் மற்றும் 'அமிர்த நீர்நிலைகள்' திட்டங்களின் கீழ் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்நிலைகள் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்தகவலை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி. ஆர். பாட்டீல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297163&reg=3&lang=1

****

TV/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297350) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी