மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசியக் கற்றல் புள்ளிகள் கட்டமைப்பின் அமலாக்கமும், விளைவுகளும்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 3:50PM by PIB Chennai

முழுமையான, பல்துறை சார்ந்த, நெகிழ்வுத்தன்மை கொண்ட, மாணவர்களை மையமாகக் கொண்டக் கல்வியை வழங்கும் நோக்கில், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது திறன் சார்ந்த கல்வியை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் அல்லது முன்னனுபவக் கற்றலை அங்கீகரிப்பதற்கு அடிப்படையாக விரிவான தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பை முன்னிறுத்துகிறது.

இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கங்களுக்கு இணங்க, தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வி, திறன் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான கட்டமைப்பாக தேசியக் கற்றல் புள்ளிகள் கட்டமைப்பை அரசு அங்கீகரித்துள்ளது. 700-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் 7,500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளும் இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த அமைப்பை செயல்படுத்துவதற்கான நடைமுறை வழிகாட்டியாக, உயர்கல்வியில் தேளசியக் கற்றல் புள்ளிகள் கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளின் படி, ஒரு கல்வித் திட்டத்திற்கான மொத்த கற்றல் புள்ளிகளில், 50% வரை திறன் சார்ந்த பாடங்கள் மூலம் பெற அனுமதி வழங்கப்படுகிறது.

மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தர் மக்களவையில் இன்று, எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297090&reg=3&lang=1

***

SS/SV/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2297313) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी