மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தொடக்கக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 3:47PM by PIB Chennai
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறித்த மாநில வாரியான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதற்கேற்ப, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களது தேவைகள், முன்னுரிமை அடிப்படையில், வருடாந்திரத் திட்டங்களைத் தயாரித்து அதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று வருகின்றன. இவை குறித்த விவரங்கள் வருடாந்திர பணித் திட்டம் & பட்ஜெட் ஆவணங்களில் இடம்பெறுகின்றன.
பின்னர், இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான நிதிசார் விதிமுறைகளின்படி, மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்தாலோசித்து, திட்ட ஒப்புதல் வாரியம் இத்திட்டங்களை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்கிறது. செலவின வேகம், அதற்கேற்ற மாநிலப் பங்குத் தொகை பெறுதல், தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், மாநிலப் பங்குத் தொகை குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள முன்பணங்கள் குறித்த விவரங்கள், தற்போதைய செலவின அறிக்கை, நிதி மேலாண்மை, கொள்முதல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை அளித்தல், முந்தைய ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட பயன்பாட்டுச் சான்றிதழ் சமர்ப்பித்தல் போன்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதன் அடிப்படையில், நிதி விடுவிக்கப்படுகிறது. நிதி விடுவிக்கப்படும்போது, முந்தைய ஆண்டின் செலவிடப்படாத மீதித் தொகையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு 'பிரபந்த்' - திட்ட மதிப்பீடு, பட்ஜெட் தயாரிப்பு, சாதனைகள், தரவுகளைக் கையாளுதல் என்ற அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் பல்வேறு நடவடிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களைப் புதுப்பித்தல் என்பது 'பிரபந்த்' அமைப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297087®=3&lang=1
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297309)
வருகையாளர் எண்ணிக்கை : 58