புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
காலமுறை தொழிலாளர் ஆய்வு முறைகளில் பல்வேறு வழிமுறை சார்ந்த மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 4:49PM by PIB Chennai
நாட்டின் தொழிலாளர் சந்தை தொடர்பான புள்ளிவிவரங்களுக்கான முக்கிய ஆதாரமாக, 2011-12-ம் ஆண்டு வரை, மத்திய புள்ளியியல்,திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வேலைவாய்ப்பு, வேலையின்மை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தொழிலாளர் சந்தை குறித்த குறியீடுகள் அவ்வப்போது, சரியான தருணத்தில் கிடைக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டும், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையிலும், காலமுறை தொழிலாளர் ஆய்வு நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது.
இந்த ஆய்வுக்கான வழிமுறைகள், மாதிரி வடிவமைப்பை உருவாக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்களின் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகே இது நடைமுறைக்கு வந்துள்ளது.
முந்தைய நடைமுறையை விட தற்போதைய வழிமுறை சார்ந்த மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் நகர்ப்புறங்களுக்கான சுழற்சி முறை குழு மாதிரி வடிவமைப்பு, உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பு வசதிகளுடன் கூடிய கணினி-சார்ந்த நேர்காணல் முறை, பணி செய்த நேரங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தல், காலமுறை தொழிலாளர் மதிப்பீடுகளை உருவாக்குவதற்கான மாதிரி வடிவமைப்பு, விசாரணை அட்டவணையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இன்று மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297165®=3&lang=1
(Release ID: 2297165)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297292)
வருகையாளர் எண்ணிக்கை : 51