மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் போஷான் திட்டத்தின் கீழ் உணவுத் தானியங்கள் ஒதுக்கீடு

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 4:16PM by PIB Chennai

பிரதமரின் போஷான் (PM POSHAN) திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குச் ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்குவதற்கான முழு உணவுத் தானியச் செலவு, போக்குவரத்துச் செலவு மற்றும் கண்காணிப்புச் செலவுகளுக்கான 100% நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, இந்திய உணவுக் கழகம் (FCI) மூலம் உணவுத் தானியங்கள் வழங்கப்படுகின்றன. தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய, விநியோக மையங்களில் சராசரித் தரம் கொண்ட தானியங்களை மட்டுமே ஆய்வு செய்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் விரிவான கண்காணிப்புக் குழுக்கள் மூலமும், வாராந்திர உணவுப் பட்டியல், பயன்படுத்தப்பட்ட உணவுத் தானியங்களின் அளவு மற்றும் பயனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களைப் பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்துவதன் மூலமும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உணவுத் தானியங்கள் திறம்பட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டிற்கு 2023-24 நிதியாண்டில் 1,00,267.70 மெட்ரிக் டன், 2024-25 நிதியாண்டில் 95,341.63 மெட்ரிக் டன் மற்றும் 2025-26 நிதியாண்டில் 90,476.98 மெட்ரிக் டன் அளவு உணவுத் தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297128&reg=3&lang=1

****

TV/SE/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2297277) வருகையாளர் எண்ணிக்கை : 69
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali