கலாசாரத்துறை அமைச்சகம்
மாணவர்களிடையே இந்தியப் பாரம்பரிய நடனங்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 4:38PM by PIB Chennai
கலையுடன் சேர்ந்த, அனுபவபூர்வமிக்க, பல்துறைச் சார்ந்த கற்றலை வலியுறுத்தக் கூடிய தேசியக் கல்விக் கொள்கை 2020 நோக்கங்களுக்கேற்ப பள்ளிக்கல்வியில் இந்தியப் பாரம்பரிய நடனங்களைச் சேர்ப்பதை அரசு ஊக்குவிக்கிறது. கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான கலாச்சார வளங்கள், பயிற்சி மையம், இந்திய பாரம்பரியம், நாட்டுப்புற நடன மரபுகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் இத்திட்டங்களில் கதக், ராய், மட்கி, கர்மா, கிரிடா போன்ற நடன வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் கலை, பிராந்தியக் கலை வடிவங்களை ஊக்குவிப்பதற்கு மத்தியப்பிரதேசத்தின் தாமோவில் பிராந்திய மையத்தையும் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் கொண்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களிடையே இந்திய நிகழ்த்துக் கலைகளை ஊக்குவிப்பதற்கு சொற்பொழிவுகள், பயிலரங்குகள், நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கலை மரபுத் தொடருக்கும் சங்கீத நாடக அகாடமி ஏற்பாடு செய்கிறது.
பாரம்பரிய நிகழ்த்துக் கலைகளில் ஈடுபடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட தகுதியுடைய மாணவர்கள் ஆகியோருக்குக் கலாச்சார திறமைத் தேடல் கல்வி உதவித்தொகைத் திட்டத்தைக் கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் அமல்படுத்துகிறது.
இத்தகவலை மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297154®=3&lang=1
****
TV/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297274)
வருகையாளர் எண்ணிக்கை : 55