சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் ஜியோ பார்சி திட்டம், மருத்துவ உதவி, குழந்தைகள், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2026 2:08PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜியோ பார்சி திட்டத்தின் மூலம்  கருத்தரிப்பு, பிரசவம், பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு ஆகிய மருத்துவ சேவைகளின் கீழ் நிதி உதவி பெற்ற பார்சி சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 582 ஆகும்.

மேலும், 2018-19-ம் ஆண்டு முதல், இத்திட்டத்தின் சமூக ஆரோக்கியம் என்ற பிரிவின் கீழ் நிதி உதவி பெற்ற பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 1055 ஆகும். இத்திட்டம் தொடங்கியது முதல் மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவு ரூ.37.43 கோடியாகும். 2014-15-ம் ஆண்டு முதல், இச்சமூகத்தில், மொத்தம் 534 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதன் மூலம் குறைந்து வரும் அவர்களது சமூகம் சார்ந்த மக்கள் தொகையை நிலைப்படுத்துவது குறித்து பார்சி சமூகத்தினரிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நிதியாண்டுகளில், இத்திட்டத்தின் மருத்துவ சேவைகளுக்காக ரூ.74 லட்சமும், சமூகத்தின் ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகளுக்காக ரூ.8.12 கோடியும், இத்திட்டம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ரூ.45 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

பார்சி சமூகத்தினரிடையே இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இத்திட்டம் தொடர்பான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், பல்வேறு பயிலரங்குகள்/கலந்துரையாடல் அமர்வுகள், பதிவு செய்யும் முகாம்கள், உயிரியல் அடையாளச் சரிபார்ப்பு முகாம்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் இன்று  எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297027&reg=3&lang=1

***

SS/SV/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2297231) வருகையாளர் எண்ணிக்கை : 56
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati