கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
நதிகளை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாவின் மேம்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 5:03PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேசத்தில் சுற்றுலா, புனிதப் பயணம் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்கில், வாகனங்கள் போன்ற சரக்குகளைக் கையாளும் சிறப்பு முனையம் (Ro-Ro), மிதக்கும் படகுத்துறைகள் மற்றும் எஃகு மிதவை மேடைகள் ஆகியவற்றை அரசு உருவாக்கியுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (IWAI), 'ரோ-ரோ' போக்குவரத்து வசதிக்காக தேசிய நீர்வழி-4-இல் (கிருஷ்ணா நதி) உள்ள முக்தியாலாவில் ஒரு பிரத்தியேக முனையத்தை அமைத்துள்ளது. மேலும், சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், நான்கு மிதக்கும் படகுத்துறைகளை அமைத்து, அவற்றை 2024-ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் நீர்வழிகள் ஆணையம் ஒப்படைத்துள்ளது.
தர்மபுரி அருகிலுள்ள கோதாவரி நதிப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை உள்ளடக்கிய நீர்வழிகள்-4 வழித்தட மேம்பாட்டிற்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் 2027-க்குள் நிறைவு செய்வதை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதே இதன் நோக்கமாகும். இந்த விரிவான திட்ட அறிக்கையின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296093®=3&lang=1
***
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296916)
வருகையாளர் எண்ணிக்கை : 33