இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

இந்திய வணிகப் போட்டி ஆணையம், பிரிக்ஸ் போட்டி ஆணையங்களின் தலைவர்கள் கூட்டத்தை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2026 3:21PM by PIB Chennai

இந்தியாவின் 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், பிரிக்ஸ் போட்டி ஆணையங்களின் தலைவர்கள் கூட்டம், இந்திய வணிகப் போட்டி ஆணையத்தால் (சிசிஐ), 2026 ஆகஸ்ட் 8 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நியாயமான போட்டியை ஊக்குவிப்பதிலும், போட்டிச் சட்டம், கொள்கைகள் ஆகியவற்றில் உருவாகிவரும் சவால்களை எதிர்கொள்வதிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் போட்டி அதிகார அமைப்புகளின் தலைவர்களும் மூத்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தனது தொடக்க உரையில் , சிசிஐ-யின் தலைவரான திருமதி ரவ்னீத் கௌர் பேசுகையில், செயல்திறன், நுகர்வோர் நலன், புத்தாக்கம், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் போட்டிச் சந்தைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் பிரிக்ஸ் போட்டி ஆணையங்களுக்குப் பகிரப்பட்ட பொறுப்பு உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

டிஜிட்டல் சந்தைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் எல்லை கடந்த தன்மை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, போட்டி அமலாக்கத்திற்கான, பயனுள்ள, எதிர்காலத்திற்கு ஏற்ற அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு, பிரிக்ஸ் போட்டி அதிகார அமைப்புகளிடையே நீடித்த ஒத்துழைப்பும் அறிவுப் பகிர்வும் இன்றியமையாதது என்று சிசிஐ-யின் தலைவர் குறிப்பிட்டார்.

திறம்பட்ட போட்டி அமலாக்கத்தை ஊக்குவிப்பதற்கும், சந்தைகளில் சவால்களை எதிர்கொள்வதற்கும், தொடர்ச்சியான ஒத்துழைப்பு, உரையாடல், அறிவுப் பகிர்வுக்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரிக்ஸ் போட்டி ஆணையங்களின் தலைவர்கள் வலியுறுத்தினர்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296800&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296890) வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati