மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மருந்தியல் துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 3:01PM by PIB Chennai

மருத்துவத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக  செயல்படுத்தப்பட்டு வரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டங்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மருந்தியல் துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.15,000 கோடியில், மார்ச் 2026 வரை ரூ.6,659 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மொத்த மருந்துகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் ரூ.87.70 கோடியும், மருத்துவ உபகரணங்களுக்கான திட்டத்தின் கீழ் ரூ.266.64 கோடியும் ஊக்கத்தொகையாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் மற்றும் நொதித்தல் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான காலதாமதம் போன்ற காரணங்களால் மொத்த மருந்துகளுக்கான திட்டங்களின் தொடக்கத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ உபகரணங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றி அமைக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295938&reg=3&lang=1

***

TV/EA/ RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296873) வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी