இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
'போதைப்பொருள் இல்லாத இந்தியா' என்ற கருப்பொருளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு - குஜராத்தின் ஹனோலில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2026 3:05PM by PIB Chennai
'போதைப்பொருள் இல்லாத இந்தியா' என்ற கருப்பொருளில், நாடு தழுவிய அளவில் 85-வது நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு ('ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்) இன்று (09.08.2026) நடைபெற்றது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா குஜராத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான இயக்கத்தில் இளைஞர்களை முன்னிறுத்தியது.
"சண்டேஸ் ஆன் சைக்கிள்" என்பதை ஒரு மக்கள் இயக்கம் என்று குறிப்பிட்ட திரு மன்சுக் மாண்டவியா, “பிரதமரின் உடல் திறன் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு பெரிய இயக்கமாக இந்த முயற்சி உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இன்று இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட 'சண்டேஸ் ஆன் சைக்கிள்' நிகழ்வுகளில், இந்தியா முழுவதும் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296795®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296860)
வருகையாளர் எண்ணிக்கை : 52