மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மருத்துவ சாதனங்கள் தொடர்பான மாநாட்டில் தலைமைச் செயல் அதிகாரிகள் வட்டமேசைக் கூட்டம் - மத்திய அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமை வகித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 AUG 2026 5:54PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறை, மத்திய வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் ஏற்பாடு செய்திருந்த 'இந்தியா மருத்துவ சாதனங்கள் 2026' என்ற மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் , மத்திய ரசாயனம் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேசை மாநாட்டில் உரையாற்றினார்.

இந்தியாவின் மருத்துவ தொழில்நுட்பத் துறையின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்காக, இந்த வட்டமேசை மாநாடு மூத்த கொள்கை வகுப்பாளர்களையும் மருத்துவ சாதனத் தொழில் துறையின் தலைவர்களையும் ஒன்றிணைத்தது. மருந்துத் துறை செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் எம். சீனிவாஸ், ஐசிஎம்ஆர்-ன் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பஹல், சுகாதாரம்- குடும்ப நலத்துறை செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, தொழில் - உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி - DPIIT) செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா, தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு சுனில் குமார் பர்ன்வால் உள்ளிட்டோரும், உலகளாவிய, உள்நாட்டு மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனங்களின் 40- க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

இந்தியாவின் மருத்துவ சாதனச் சூழலமைப்பை வலுப்படுத்துவது, புத்தாக்கத்தையும், முதலீட்டையும் ஊக்குவிப்பது, உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவது, இந்திய மருத்துவ சாதன நிறுவனங்கள் உலக அளவில் தங்கள் தடத்தை விரிவுபடுத்துவதற்கான சூழலை உருவாக்குவது ஆகியவை குறித்து ஒரு தளத்தை தலைமைச் செயல் அதிகாரிகள் வட்டமேசை மாநாடு வழங்கியது.

சுகாதார வளங்கள் திறம்படப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் அதே வேளையில், புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் தேவையை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். இந்தியாவில் புதுமையான மருத்துவத் தொழில்நுட்பங்களை பரவலாக ஏற்றுக்கொள்வதற்கு நம்பகமான மருத்துவச் சான்றுகள், வெளிப்படையான சுகாதார தொழில்நுட்ப மதிப்பீட்டு செயல்முறைகள், நியாயமான விலை நிர்ணயம், மருத்துவர்களின் அதிகப் பங்கேற்பு, வலுவான பயிற்சி அமைப்புகள் ஆகியவை தேவை என்பதை இந்த அமர்வு எடுத்துக் காட்டியது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296571&reg=3&lang=1

***

(Release ID: 2296571)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296669) வருகையாளர் எண்ணிக்கை : 55
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati