சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் இரண்டு திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்துடன் இணைக்கப்பட்டன

प्रविष्टि तिथि: 08 AUG 2026 7:07PM by PIB Chennai

திட்டங்களைச் செயல்படுத்துவதில் இரட்டை நிலை குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக, சாதி மறுப்பு கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவு அளிக்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம், வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினருக்கான டாக்டர் அம்பேத்கர் தேசிய நிவாரணத் திட்டம் ஆகியவை, சமூக நீதி - அதிகாரமளித்தல் துறையின் மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்துடன் 2023 மார்ச் 31 முதல் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் கீழ் உள்ள நலத்திட்டங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த, சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதாவலே இந்த விவரங்களைத் தெரிவித்தார். மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்துடன் இந்த இரண்டு திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அவைக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேற்கூறிய திட்டங்களின் இணைப்பினால் ஏற்பட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளைக் கையாள்வதற்காக, டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை ஒரு சிறப்பு முன்முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சாதி மறுப்பு கலப்புத் திருமணங்கள் மூலம் சமூக ஒருமைப்பாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் கீழ், 385 திருமணங்களுக்கு சுமார் ₹ 9 கோடி ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதையும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிவாரணமும் உதவியும் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296603&reg=3&lang=1

***

(Release ID: 2296603)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2296667) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati