அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வாயிலாக, சாமானிய மக்களிடம் அவை சார்ந்த தகவல்கள் கொண்டு செல்வதற்கான முன்முயற்சி
प्रविष्टि तिथि:
08 AUG 2026 5:10PM by PIB Chennai
புது தில்லியில் உள்ள இந்திய அறிவியியல் ஆராய்ச்சிக் கவுன்சில்-தேசிய அறிவியல் தகவல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், அதன் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ், பிரபலமான அறிவியல் ஆய்வுக்கு கட்டுரைகள் எழுதுவது குறித்த இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை 2026 ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடத்தியது.
இந்தப் பயிலரங்கில், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியாளர்களின் அறிவியல் தகவல் தொடர்பு, எழுத்துத் திறன்களை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 21 பேர் இந்த பயிறசியில் பங்கேற்றனர்.
இந்திய அறிவியியல் ஆராய்ச்சிக் கவுன்சில்-தேசிய அறிவியல் தகவல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கீதா வாணி ராயசம் இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இளைஞர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், அறிவியலுக்கும், சமூகத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதற்கும், அறிவியல் ஆராய்ச்சிகளை எளிமையான, துல்லியமான, சுவாரஸ்யமான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிறுவனத்தின் பயிற்சிப் பிரிவுத் தலைவர் திரு. முகேஷ் ஏ. பண்ட் அறிவியல் ஆராய்ச்சியின் சமூகத் தாக்கத்தை மேம்படுத்துவதில், சாமானிய மக்களுக்கான அறிவியல் ஆய்வுக்கு கட்டுரைகளை எழுத வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இத்திட்டத்தை முதன்மை ஆய்வாளர் திருமதி. மீதாலி பாரதி, இணை முதன்மை ஆய்வாளர் திரு. முகமது சலீம் அன்சாரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மனிஷ் மோகன் கோர் இத்திட்டம் குறித்த கண்ணோட்டத்தை வழங்கியதுடன், பயிற்சி முழுவதும் நடைபெற்ற கல்விசார் அமர்வுகளையும் ஒருங்கிணைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296560®=3&lang=1
****
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2296602)
आगंतुक पटल : 10