இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு கூட்டமைப்பு மாநாட்டில், மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 5:33PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தேசிய விளையாட்டு கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றினார். இதில் இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய விளையாட்டு ஆணையம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின்  பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு, விளையாட்டு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், விளையாட்டு வீரர்களின் நலனை மேம்படுத்துதல், வரவிருக்கும் முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியாவின் தயார்நிலையை மறுஆய்வு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

இந்த மாநாட்டில், 2025-ம் ஆண்டின் தேசிய விளையாட்டு ஆளுகைச் சட்டத்தின் கீழ் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் நிலை, விளையாட்டு அமைப்புகளில் சிறந்த நிர்வாக நடைமுறைகள், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ், 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை குறித்த விரிவான விளக்கங்கள் இடம்பெற்றன.

மாநாட்டில் உரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, விளையாட்டு வீரர்களின் நலன்களும் நல்வாழ்வும் அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று கூறினார். விளையாட்டுத் துறைக்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த திரு மாண்டவியா, நாட்டில் ஒரு வலுவான விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்பதை  நோக்கமாக கொண்டு அரசு செயல்படுகிறது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296149&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296596) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati