பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பாலின வரவு செலவுத் திட்ட நடைமுறைகளை மேம்படுத்த அமைச்சகங்கள், மாநிலங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவு: மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 4:25PM by PIB Chennai
பாலின வரவு செலவுத் திட்ட நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குக் திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஆதரவை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கி வருகிறது. கொள்கைகள், திட்டங்களில் பாலினச் சமத்துவமின்மையைக் களைந்து, சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து அமைச்சகங்களிலும் பாலின வரவு செலவுத் திட்டப் பிரிவுகள் அமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இதுவரை 62 மத்திய அமைச்சகங்கள், 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இத்தகைய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாக இத்துறைக்கான இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் தெரிவித்துள்ளார்..
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்த அவர், அரசு அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காகத் பயிற்சி நிறுவனங்களுக்குப் பொருளாதார உதவிகளும் வழங்கப்படுவதாகக் கூறினார். 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டின் பாலின வரவு செலவு அறிக்கையில் பெண்கள், பெண் குழந்தைகளின் நலனுக்காக ரூ.5.01 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது 2025-26 நிதி ஆண்டின் ஒதுக்கீடான ரூ.4.49 லட்சம் கோடியை விட 11.55 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதி ஆண்டில் 53 மத்திய அமைச்சகங்களும் 5 யூனியன் பிரதேசங்களும் இத்தகைய நிதி ஒதுக்கீடுகளைப் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296044®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2296402)
வருகையாளர் எண்ணிக்கை : 41