பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சக்தி இயக்கத்தின் வழிகாட்டுதல்களின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி: மத்திய இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 4:26PM by PIB Chennai
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சக்தி இயக்கத்தின் (Mission Shakti) வழிகாட்டுதல்களின் கீழ், வன்முறையால் பாதிக்கப்பட்ட, மனவேதனையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உடனடி ஆதரவையும், உதவிகளையும் ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) வழங்கி வருகிறது. நாடு முழுவதும் 2015 ஏப்ரல் 1 முதல் 2026 ஜூன் 30 வரை 1,033 ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 991 மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இவற்றின் மூலம் 15.20 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளதாக, அத்துறைக்கான இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்த அவர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் செயல்படும் 124 மையங்கள் மூலம் 3.42 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உதவி பெற்றுள்ளதாகக் கூறினார். இந்த இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் கண்காணிக்க மிஷன் சக்தி தரவுத் தளத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்ட, மாநில, தேசிய அளவில் இத்திட்டங்களின் செயல்பாடுகளை இந்த இணையதளம் கண்காணிக்க உதவுகிறது. மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் இத்திட்டத்தை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் அமல்படுத்தி வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296046®=3&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2296384)
வருகையாளர் எண்ணிக்கை : 49