மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் 9-வது இந்திய மருத்துவ உபகரணங்கள் மாநாடு 2026 தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 4:10PM by PIB Chennai

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்தியல் துறை, இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புடன் (FICCI) இணைந்து நடத்தும் 2 நாள் '9-வது இந்திய மருத்துவ உபகரணங்கள் மாநாடு 2026' புதுதில்லியில் இன்று தொடங்கியது.

"வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி: தரமான மருத்துவ உபகரணங்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளில் இம்மாநாடு நடைபெறுகிறது. தொடக்க விழாவில் பேசிய மருந்தியல் துறைச் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, உள்நாட்டு உற்பத்தி வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தும் என கூறினார். இந்திய மருத்துவ உபகரணங்கள் சந்தையின் மதிப்பு சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில், உலகளாவிய சந்தை 600 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. எனவே, வெறும் இறக்குமதி மாற்றீடாக மட்டும் இல்லாமல், உலகளாவிய சந்தைகளுக்கான ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறையை இந்தியா உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் "மருத்துவ உபகரணங்களின் சேவை மற்றும் பராமரிப்பை வலுப்படுத்துதல்" குறித்த வெள்ளை அறிக்கையும் வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296028&reg=3&lang=1

****

TV/SE/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2296294) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी