ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மத்திய அரசு

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 4:02PM by PIB Chennai

மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், ‘தீன்தயாள் அந்தியோதயா - தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம்’  மூலம் கிராமப்புற மக்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10.08 கோடி பெண்கள் 92 லட்சம் சுயஉதவிக் குழுக்களாக வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் 57.60 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் வங்கி நிதிப் பிணைப்பு  வசதியைப் பெற்றுப் பயனடைந்துள்ளன.

இக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க "சரஸ்"  மற்றும் "ஆஜீவிகா" ஆகிய பிராண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் ‘மதி’  உட்பட 25 மாநிலங்கள் தங்களது சொந்த மாநிலப் பிராண்டுகள் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

மேலும், ‘இ-சரஸ்’  இணையதளம், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜியோமார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் தேசிய 'சரஸ் மேளா' கண்காட்சிகள் மூலமும் விற்பனை ஊக்குவிக்கப்படுகிறது. இத்தகவலை மத்திய இணை அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296024&reg=3&lang=1  

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296226) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी