ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் 3.12 கோடி வீடுகள் கட்டி முடிப்பு

प्रविष्टि तिथि: 07 AUG 2026 4:11PM by PIB Chennai

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இதுவரை ஒதுக்கப்பட்ட 4.18 கோடி இலக்கில், 3.91 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 3.12 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 79 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் 2025-26 நிதியாண்டில் மட்டும் 26.57 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளே தங்களுக்கு விருப்பமான உள்ளூர் தொழில்நுட்பம் மற்றும் காலநிலைக்கு ஏற்ற வடிவமைப்பில் வீடுகளைக் கட்டிக் கொள்ளலாம்.

மேலும், இவர்களின் வீடுகளுக்கு குடிநீர் , மின்சாரம் மற்றும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு  ஆகிய அத்தியாவசிய வசதிகளும் பிற அரசுத் திட்டங்கள் மூலம் ஒருங்கிணைத்து நேரடியாக வழங்கப்படுகின்றன. கட்டுமானப் பணிகளைத் தரமாக மேற்கொள்ளக் கிராமப்புறக் கொத்தனார்களுக்கான சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தேசியளவில் 60 சதவீத  இலக்கு பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 5 சதவீத வீடுகள் சிறப்புத் திட்டமாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இத்தகவலை மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296027&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2296212) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी