மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டத்தின் செயல்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 2:51PM by PIB Chennai

2025-26-ம் நிதியாண்டில் பிஹார் மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் 3 மற்றும் கிராமப்புறங்களில் 309 உட்பட மொத்தம் 410 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இக்காலக்கட்டத்தில், ரூ. 219.18 கோடி மதிப்பிலான விற்பனை மூலம் மக்களுக்கு சுமார் ரூ. 876.72 கோடி சேமிப்பு கிடைத்துள்ளது. மேலும், தலா ரூ. 1 விலையில் 1.17 கோடிக்கும் அதிகமான சுவிதா சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, 5 சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 42 விநியோகஸ்தர்கள் அடங்கிய தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மூலம் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295926&reg=3&lang=1 

***

TV/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296198) வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada