மருந்துகள் துறை
மக்கள் மருந்தகங்கள் மூலம் கடந்த இரு நிதியாண்டுகளில் ரூ.4,274 கோடிக்கு மருந்துகள் விற்பனை
प्रविष्टि तिथि:
07 AUG 2026 2:59PM by PIB Chennai
பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திட்டத்தின் கீழ் இயங்கும் மருந்தகங்கள் மூலம் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 4,274.66 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனையாகியுள்ளன.
இதன்படி, 2024-25 நிதியாண்டில் ரூ. 2,022.47 கோடியும், 2025-26 நிதியாண்டில் ரூ. 2,252.19 கோடியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தயாரிப்புப் பட்டியலில் தற்போது 315 அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை சந்தையில் கிடைக்கும் பிற முன்னணி பிராண்டட் தயாரிப்புகளின் விலையை விட சுமார் 50% முதல் 80% வரை குறைவாகும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஜூன் 30, 2026 நிலவரப்படி மொத்தம் 77 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.
இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295935®=3&lang=1
***
TV/EA/RJ
(रिलीज़ आईडी: 2296194)
आगंतुक पटल : 3