மருந்துகள் துறை
உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2026 2:47PM by PIB Chennai
நாட்டில் உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தவும், அவை சாமானிய மக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு சட்டப்பூர்வ மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மருந்துகள் விலைக்கட்டுப்பாட்டு ஆணை 2013-ன் கீழ் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் மருந்துகளின் உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இதன்படி, ஜூலை 23, 2026 வரையிலான தரவுகளின்படி 935 மருந்து பார்முலேஷன்களுக்கான உச்சவரம்பு விலையும், 3,845 புதிய மருந்துகளுக்கான சில்லறை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அத்தியாவசிய மருந்துகளின் விலை சராசரியாக 17 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 'பிரதமரின் மக்கள் மருந்தகம்’ திட்டத்தின் கீழ் இயங்கும் மக்கள் மருந்தகம் மூலம் பிராண்டட் மருந்துகளை விட 50% முதல் 80% வரை குறைந்த விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படுகின்றன. 'அம்ரித்' மருந்தகங்கள் மூலம் புற்றுநோய் மற்றும் இருதய நோய்களுக்கான மருந்துகள் 50% வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகளும் விநியோகிக்கப்படுகின்றன.
இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295923®=3&lang=1
***
TV/EA/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296191)
வருகையாளர் எண்ணிக்கை : 57