மருந்துகள் துறை
மொத்த மருந்துப் பொருட்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம்
प्रविष्टि तिथि:
07 AUG 2026 2:54PM by PIB Chennai
இந்தியாவில் மிக முக்கிய தொடக்க மூலப்பொருட்கள் (KSMs), இடைநிலை மருந்துகள் (DIs) மற்றும் முக்கிய மருந்து மூலப்பொருட்கள் (APIs) ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, ரூ. 6,940 கோடி நிதி ஒதுக்கீட்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 48 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 2026 மார்ச் வரையிலான நிலவரப்படி, திட்டமிடப்பட்ட முதலீடான ரூ. 4,329.95 கோடியை கடந்து, ரூ. 5,070.45 கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 41 விளைபொருட்களில், பெனிசிலின் ஜி, லெவோஃப்ளோக்சசின், டெல்மிசார்ட்டன், டிக்ளோஃபெனாக் சோடியம் உள்ளிட்ட 18 முக்கிய மருந்து மூலப்பொருட்கள் (APIs) உற்பத்தி ஏற்கனவே தொடங்கி, இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் திட்டமிடப்பட்ட முதலீடான ரூ. 31.5 கோடியை விட அதிகமாக, ரூ. 45.6 கோடி அளவிற்குத் தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆண்டிற்கு 280 மெட்ரிக் டன் அளவிலான உற்பத்தித் திறன் முழுமையாக நிறுவப்பட்டு, உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகவலை ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா பட்டேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295928®=48&lang=2
***
TV/SE/RJ
(रिलीज़ आईडी: 2296173)
आगंतुक पटल : 6