மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் ஒழுங்குமுறை

प्रविष्टि तिथि: 07 AUG 2026 2:57PM by PIB Chennai

தேசிய மருந்துகள் விலை நிர்ணயக் கொள்கை 2012-ன் அடிப்படையில், மருந்துகள் (விலைக்கட்டுப்பாடு) ஆணை 2013 (DPCO, 2013) படி மருந்துகளின் விலைகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பு விலையை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் (NPPA) நிர்ணயிக்கிறது. அட்டவணையில் இல்லாத மருந்துகளின் அதிகபட்ச விற்பனை விலையை 12 மாதங்களில் 10 சதவீதத்திற்கு மேல் உயர்த்தக்கூடாது.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, வரைவு விலை கணக்கீட்டுத் தாள்கள் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் இணையதளத்தில் 10 நாட்கள் வெளியிடப்பட்டு, கருத்துரைகள் பெறப்பட்ட பின்னரே விலைகள் இறுதி செய்யப்படுகின்றன. அதிக விலை வசூலிப்பதைத் தடுக்க, மருந்துப் பாக்கெட்டுகளில் அதிகபட்ச விற்பனை விலையை அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிறுவனங்களின் தவறான சந்தைப்படுத்தலைத் தவிர்க்க, சீரான மருந்து சந்தைப்படுத்தல் நடைமுறைகள் விசரணை விதிமுறை 2024 வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவர்களுக்குப் பரிசுகள் மற்றும் நிதி நன்மைகள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம், ஆயுஷ்மான் பாரத் மற்றும் அம்ரித் (AMRIT) மருந்தகங்கள் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையிலும் இலவசமாகவும் அத்தியாவசிய மருந்துகள் வழங்கி அரசு உதவி வருகிறது.

இத்தகவலை ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295930&reg=3&lang=1  

***

TV/SE/RJ


(रिलीज़ आईडी: 2296170) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी