சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 5:33PM by PIB Chennai
தரமான உயர்கல்விக்கான வாய்ப்பு, சிறந்த வேலைவாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம், ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஆற்றலை கல்வி கொண்டுள்ளது. இருப்பினும், சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு திறமையான மாணவர்களுக்கு, இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு நிதி நெருக்கடி பெரும்பாலும் ஒரு தடையாக அமைகிறது.
இதர பிற்படுத்தப்பட்ட விரிவினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள வகுப்பினர், குறிப்பிடப்படாத பழங்குடியின மாணவர்களுக்கான சிறந்த கல்வித் திட்டம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை உணர்த்தும் வகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவரான மிருதுஞ்சய் சிங், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது முதுநிலை நிர்வாக மேலாண்மை படிப்பை வெற்றிகரமாக முடித்தார். இன்று அவர் வி ட்ரான்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு பிரிவான வி எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
குறைந்த நிதி வசதிகள் இருந்தபோதிலும் கல்வியை மிகவும் மதித்த ஒரு குடும்பப் பின்னணியிலிருந்து வந்த மிருதுஞ்சய், ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்கவும், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் விரும்பினார். மேலாண்மை படிப்பில் சேர்ந்தபோது, அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சமாக இருந்தது. இதனால் அதிக செலவு ஏற்படுத்தும் மேலாண்மைக் கல்வியைத் தொடர்வது மிகவும் கடினமாக இருந்தது. இத்தகைய நிதிச் சவால்கள் இருந்தபோதிலும், அவர் கல்வி கற்பதிலும் தொழில்முறை வளர்ச்சியிலும் உறுதியாக இருந்தார்.
அவரது திறனை அங்கீகரித்த சிறந்த கல்வித் திட்டம், அவரது உயர்கல்விக்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகையை வழங்கியது. அவர் தனது நிர்வாக மேலாண்மை படிப்பின் முதல் ஆண்டிற்காக மார்ச் 2025-ல் ரூ 7.85 லட்சத்தையும், இரண்டாம் ஆண்டிற்காக ஜனவரி 2026-ல் ரூ 7.66 லட்சத்தையும் உதவித்தொகையாகப் பெற்றார். இந்த கல்வி உதவித்தொகை அவரது குடும்பத்தின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைத்ததுடன், கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர் முழு கவனத்தையும் செலுத்த வழிவகுத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295603®=3&lang=1
***
TV/SV/RJ