புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகத் தலைவர்கள் கூட்டம்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 4:38PM by PIB Chennai

"மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு" என்ற பிரிக்ஸ் அமைப்பின் ஒட்டுமொத்த கருப்பொருளுடன் இணக்கமான வகையில், "மாற்றத்தை முன்னெடுக்கும் தரமான புள்ளிவிவரங்கள்" என்ற கருப்பொருளின் கீழ், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகங்களின் தலைவர்களுக்கான இரு நாள் கூட்டம் 2026 ஆகஸ்ட் 4 அன்று லக்னோவில் நிறைவடைந்தது. இதில், பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனைக் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய புள்ளியியல் அலுவலகத் தலைவர்கள் 2026 மாநாட்டோடு இணைந்து, அமைச்சகம், "வளர்ந்து வரும் தரவுச் சூழலில் செயற்கை நுண்ணறிவுக்குத் தயாரான பொதுத் தரவு அமைப்புமுறைகளை உருவாக்குதல்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது. பொறுப்பான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டைச் செயல்படுத்துவதற்கும், சான்றுகள் அடிப்படையிலான ஆளுகையை ஆதரிப்பதற்கும், இணக்கமான, நம்பகமான மற்றும் உயர்தரமான பொதுத் தரவு அமைப்புமுறைகளின் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல்கள் வலியுறுத்தின.

மேலும், அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள், திறன் மேம்பாடு மற்றும் உத்திசார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும், இந்தோனேசியாவின் பிபிஎஸ் -புள்ளியியல் அமைப்பும் இருதரப்புச் சந்திப்பின்போது ஒரு உடன்படிக்கையில்  கையெழுத்திட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294324&reg=3&lang=1    

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2295798) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी