உரங்கள் துறை
azadi ka amrit mahotsav

'ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் நாடு முழுவதும் உரங்களின் இருப்பையும் விநியோகத்தையும் வலுப்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 04 AUG 2026 4:05PM by PIB Chennai

பிரதமரின் தேசிய மக்கள் உரத் திட்டத்தின் கீழ், 'ஒரே நாடு, ஒரே உரம்' என்ற முன்முயற்சியின் மூலம் இந்திய அரசு நாட்டின் உர விநியோக முறையை வலுப்படுத்தியுள்ளது. 2022 ஆகஸ்ட் 24 முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தின்படி, பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து உர நிறுவனங்களும், மானியம் வழங்கப்படும் உரங்களை நாடு முழுவதும் "பாரத்" என்ற பொதுவான வணிகப் பெயரின் கீழ் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

'பாரத்' பிராண்டின் கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தத் திட்டம் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது, முறைகேடுகளைத் தடுக்கிறது மற்றும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகேஎஸ் வகைகள் உள்ளிட்ட மானியம் வழங்கப்படும் அனைத்து உரங்களும் 'பாரத்' பிராண்டின் கீழ் சந்தைப்படுத்தப்படுகின்றன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா மற்றும் இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் ஆகியோர் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294272&reg=3&lang=1   

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2295796) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Kannada