ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், தரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 5:10PM by PIB Chennai
கிராமப்புறக் குடும்பங்களுக்குப் போதுமான அளவு, நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன், சீரான, நீண்ட கால அடிப்படையில் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கூட்டு முயற்சியுடன் ஜல் ஜீவன் இயக்கம், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், குழாய் இணைப்பு மூலம் குடிநீர் மூலம் வழங்கப்படும் குடிநீரின் தரத்தை அளவிட, இந்தியத் தரநிலைகள் அமைவனத்திபன் பிஐஎஸ் :10500' தரநிலைகள் அளவுகோலாகப் பின்பற்றப்படுகின்றன.
இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது, நாட்டில் 3.24 கோடி (16.72%) கிராமப்புறக் குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 18.07.2026 நிலவரப்படி, மொத்தம் உள்ள 19.36 கோடி கிராமப்புறக் குடும்பங்களில், 15.89 கோடி (82.09%) குடும்பங்களுக்குக் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், குடும்பங்களுக்குக் குழாய் வழி குடிநீர் வழங்கும் திட்டங்களை வகுக்கும் போது, வேதியியல் மாசுக்களால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குடிநீரின் தரம் தொடர்பான சிக்கல்கள் உள்ள கிராமங்களுக்கு, மாற்று முறையில் பாதுகாப்பான நீர் ஆதாரங்கள் அல்லது பெருமளவிலான நீர் இடமாற்றத் திட்டங்களின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோகத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நீர் விநியோகத் திட்டமும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் நீர் ஆதாரக் கண்டறிதல் குழுவின் பரிந்துரைக்குப் பின்னரே அங்கீகரிக்கப்படுகிறது. அக்குழு, இத்திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட நீர் ஆதாரம், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நீர் விநியோகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப் போதுமான நீர் இருப்பைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
மக்களவையில் இன்று மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295576®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2295780)
आगंतुक पटल : 9