தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய தலைமைத் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்கு ரூ 26.81 கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பு

प्रविष्टि तिथि: 06 AUG 2026 5:00PM by PIB Chennai

தொழில்துறைத் தகராறுகளைத் தீர்க்கும் வகையில், ஏசிசி நிறுவனத்தின் 'பார்கர் சிமெண்ட் ஒர்க்ஸ்' நிர்வாகத்திற்கும், பார்கர் மாவட்டம் பார்டோலில் உள்ள 'ஹிரா சிமெண்ட் ஷ்ராமிகா சங்கா' அமைப்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையே 2026 ஜூலை 27 அன்று  சமரச ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

2026 ஆகஸ்ட் 19 முதல் நிறுவனத்தை மூடப்போவதாக நிர்வாகம் 2026 ஜூன் 19 அன்று வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, நிர்வாகம் - தொழிலாளர்கள் இடையே தகராறு எழுந்தது. மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய தலைமைத் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் சமரச அதிகாரியாக புவனேஷ்வர் மண்டலத்தின் மத்திய துணைத் தலைமைத் தொழிலாளர் ஆணையர் திரு. சிரஞ்சீவ் சைகியா தலைமையில் விரிவான சமரச நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு இணக்கமான தீர்வு எட்டப்பட்டது.

இந்த விவகாரம் சமரச அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, நிர்வாகத்திற்கும், பார்டோல் 'ஹிரா சிமெண்ட் ஷ்ராமிகா சங்கா'வின் பொதுச் செயலாளர், பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கும் இடையே தொடர்ச்சியான சமரச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் விளைவாக, இரு தரப்பினரின் கருத்துக்கள், நலன்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, சமரச ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2026 ஜூலை 27 அன்று முறையாகக் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பர்கர் சிமெண்ட் ஆலையில் பணிபுரியும் குறைந்தது 61 கடைநிலைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 26.81 கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களின் நலன், பணி சார்ந்த உரிமைகள் குறித்த அம்சங்களும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அவர்களின் நிதிசார் நலன்கள், சமூகப் பாதுகாப்பு ஆகியவை முழுமையான முறையில் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295555&reg=3&lang=1   

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2295735) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी