வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
காப்புரிமை, வர்த்தக முத்திரை முகவர் தேர்வுகள் 2027: உத்தேசத் தேதிகள் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 4:45PM by PIB Chennai
மத்திய காப்புரிமை, வடிவமைப்பு, வர்த்தக முத்திரைகளுக்கான தலைமைப் பதிவாளர் அலுவலகம், 2027-ம் ஆண்டிற்கான வர்த்தக முத்திரை முகவர் தேர்வை 2027 ஜனவரி 9 (சனிக்கிழமை) அன்றும், காப்புரிமை முகவர் தேர்வை ஜனவரி 10 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தேர்வுகள் சென்னை, அகமதாபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் 15 மையங்களில் நடத்தப்பட உள்ளன.
இரண்டு தேர்வுகளும் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. தலா 100 மதிப்பெண்கள் கொண்ட முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுடன், விண்ணப்பதாரரின் தகுதியை மதிப்பிடும் வகையில் 50 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். தேர்வர்கள் ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 60 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும்.
நாட்டில் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வும், புத்தாக்கம், தொழில்முனைவு வளர்ச்சியும் மேம்பட்டு வரும் நிலையில், தகுதியுள்ள முகவர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. காப்புரிமை, வர்த்தக முத்திரை பதிவு, பதிப்புரிமை, புவிசார் குறியீடுகளைப் பாதுகாப்பதில் இவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். எனவே, தகுதியுள்ள நபர்கள் இத்தேர்வுகளில் பங்கேற்று நாட்டின் அறிவுசார் சொத்துரிமை அமைப்பை வலுப்படுத்த முன்வருமாறு தலைமைப் பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295537®=3&lang=1
***
TV/PD/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2295718)
வருகையாளர் எண்ணிக்கை : 54