ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷீ-லீப்ஸ் திட்டத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 AUG 2026 4:27PM by PIB Chennai

ஷீ-லீப்ஸ் (சுய-உதவி தொழில்முனைவோர் - வளம் மற்றும் நிலைத்தன்மைக்கான வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுத் திட்டம்) செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் தொழில்முனைவு முயற்சிகளைக் கண்காணிப்பதற்கான வசதியும் இதில் உள்ளது. ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் தேசிய ஊரக மேம்பாட்டு மாநாட்டின் போது, 2026 ஜூன் 29-ஆம் தேதியன்று இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இது மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள் வாயிலாக 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், இது நிறுவனங்களைக் கண்காணிப்பதிலும், திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பதற்கான ஆதரவை வழங்குவதிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஷீ-லீப்ஸ் டிஜிட்டல் தளத்தில் நாடு முழுவதும் மொத்தம் 11,22,871 சுயஉதவிக் குழு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 36,060 நிறுவனங்களும், புதுச்சேரியில் 346 நிறுவனங்களும் அடங்கும்.  

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசனி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294306&reg=3&lang=1    

***

TV/BR/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2295715) வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी