விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயிர் முறை மாற்றம் மற்றும் நுண்ணீர் பாசனம்: மத்திய அரசின் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 4:18PM by PIB Chennai

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நீர்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிக நீர் தேவைப்படும் நெல், கரும்பு போன்ற பயிர்களுக்குப் பதிலாகக் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள் போன்ற குறைந்த நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

நாட்டில் அதிக நீர் தேவைப்படும் பயிர்கள் 62.7 மில்லியன் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. மழைப்பொழிவு குறைவாக உள்ள பகுதிகளில் பயிரிடப்படும் நெல், கரும்புக்கு மாற்றாகப் பயிர் முறையை மாற்ற அறிவியல் பூர்வமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

‘சொட்டு நீர் பாசனம்’ மற்றும் தெளிப்பு நீர் பாசனத்தை ஊக்குவிக்க  விவசாயத்திற்கான பிரதமரின் நீர்பாசன திட்டத்தின் ‘துளிநீரில் அதிக பயிர்’ சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், 'பிரதமரின் சிறுதானிய உற்பத்தி திட்டம்  மற்றும் 'தேசிய காலநிலை மீள்தன்மை வேளாண்மை திட்டம்' ஆகியவற்றின் மூலம் மண் வளம், மழைநீர் சேகரிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர் ரகங்கள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகவலை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு. பகீரத் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294287&reg=3&lang=1   

***

 TV/VK/SE


(रिलीज़ आईडी: 2295704) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali