அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் தகவல் தொடர்பில் வளர்ந்துவரும் போக்குகள் தொடர்பான திறன்சார் பயிற்சி வகுப்பு

प्रविष्टि तिथि: 06 AUG 2026 3:59PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-தேசிய அறிவியல் தகவல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், 'அறிவியல் தகவல் தொடர்பு, வளர்ந்துவரும் போக்குகள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் திறன் பயிற்சி வகுப்பை ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஊடகத் துறையைச் சேர்ந்த 30 பேர் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய சிஎஸ்ஐஆர்-நிஸ்பர் (CSIR - NISCPR) இயக்குநர் டாக்டர் கீதா வாணி ராயசம், அறிவியல் அறிவை மேலும் நம்பகமானதாகவும் பயனளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதில் பொறுப்பான அறிவியல் தகவல் தொடர்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பயிற்சிப் பிரிவின் தலைவர் திரு முகேஷ் ஏ பந்த் வரவேற்புரையாற்றினார். அவர் பேசுகையில், அறிவியல் ஆராய்ச்சிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் அறிவியல் தகவல் தொடர்பின் பங்கு அதிகரித்து வருகிறது என்றார். நிறைவுநாள் நிகழ்வில் பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295474&reg=3&lang=1     

***

 TV/PD/SE


(रिलीज़ आईडी: 2295674) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu