அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக்கான உயிரித் தொழில்நுட்பம் (பயோஇ3) கொள்கையின் முக்கியத்துவம்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:56PM by PIB Chennai
உயிரி-உற்பத்தி மையங்கள், உயிரி-ஆய்வகங்களை அமைப்பதற்காக, பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்புக்கான உயிரித் தொழில்நுட்பம் என்ற பயோஇ3 கொள்கையின் கீழ், உயிரித் தொழில்நுட்பத் துறை ஆறு முக்கியப் பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளது.
மேலும், உயிரி-செயற்கை நுண்ணறிவு சார்ந்த மையங்களை நிறுவுவதற்கு ஐந்து முன்னுரிமைத் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை, ஆயுர்வேதம், விவசாயத் துறை சார்ந்த கண்டுபிடிப்புகள், மரபணு சார்ந்த நோயறிதல், செயற்கை உயிரியல், உயிரி-மூலக்கூறு வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.
விளம்பரங்கள் மூலம் நாடு தழுவிய அளவில் கோரப்பட்ட திட்ட முன்மொழிவுகளுக்கான விண்ணப்பங்களை, பல்வேறு கட்டங்களாக கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்திய பின்னர், உயிரி-உற்பத்தி மையங்கள், உயிரி-ஆய்வகங்கள், உயிரி-செயற்கை நுண்ணறிவு மையங்கள் ஆகியவை நிறுவப்படுகின்றன.
அரசின் இந்த பயோஇ3 கொள்கையைச் செயல்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் 1,500 நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு உயிரி-உற்பத்தியை ஊக்குவிக்கவும், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறும் நடுத்தர நிறுவனங்கள், தனியார் துறையின் பங்கேற்பை அதிகரிக்கவும், இந்தக் கொள்கையின் கீழ், திட்டச் செலவில் 70% வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 30% செலவை தனியார் துறை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று,மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295435®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2295663)
आगंतुक पटल : 5