ஜவுளித்துறை அமைச்சகம்
பருத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்க 'கபஸ் கிராந்தி' திட்டம் அறிமுகம்
प्रविष्टि तिथि:
04 AUG 2026 1:41PM by PIB Chennai
நாட்டின் பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில், ரூ.5,659.22 கோடி மொத்த மதிப்பீட்டில் 'கபஸ் கிராந்தி' (KAPAS KANTI) என்ற பருத்தி உற்பத்தித்திறன் இயக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் 2030-31 வரையிலான 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் நாட்டின் 14 முக்கிய பருத்தி உற்பத்தி மாநிலங்களில் உள்ள 140 சாத்தியக்கூறுகள் கொண்ட மாவட்டங்களில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பருத்தி உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், அடர் நடும் முறை, கூடுதல் நீள இழைப் பருத்தி சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும்.
மேலும், நாடு முழுவதும் 50 பருத்தி பரிசோதனை ஆய்வகங்களை அமைப்பதுடன், கஸ்தூரி பாரத் சான்றளிக்கப்பட்ட பருத்தி மூட்டைகளை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட உள்ளன.
இத்தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294191®=3&lang=11
***
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2295645)
आगंतुक पटल : 3