கலாசாரத்துறை அமைச்சகம்
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:54PM by PIB Chennai
யுனெஸ்கோ அமைப்புடனான 2003-ம் ஆண்டு செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின் கீழ், தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின் 20-வது அமர்வு, 2025 டிசம்பர் 8 முதல் 13 வரை புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் (லால் கிலா) நடைபெற்றது.
அரசுகளுக்கு இடையேயான குழுவின் அமர்வை இந்தியா நடத்தியது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்தது. மேலும், இந்த உடன்படிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்ட 20 ஆண்டு நிறைவு தினமும் அமைந்திருந்தது. இது, வாழும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், சர்வதேச கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்புதன் கூடிய செயல்பாடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அமர்வில் 130 நாடுகளைச் சேர்ந்த 1,200 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் கொள்கை ரீதியான உரையாடல், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிப்பதற்கான உலகளவிலான தளமாக இது அமைந்திருந்தது.
மாநிலங்களவையில் இன்று, மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295431®=3&lang=1
(Release ID: 2295431)
***
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295632)
आगंतुक पटल : 8