கூட்டுறவு அமைச்சகம்
வனப் பொருட்கள் சார்ந்த கூட்டுறவுச் சங்கங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2026 4:49PM by PIB Chennai
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சிறு வனப் பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்யவும் கூட்டுறவுச் சங்கங்களை மத்திய அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. 'தேசியக் கூட்டுறவுக் கொள்கை 2025'-ன் கீழ், பழங்குடியின மக்களின் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தி, வனப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
'ட்ரைஃபெட்' அமைப்பின் 'வன்தன்'' திட்டத்தின் கீழ், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 100 சதவீதம் அரசு நிதியுதவியுடன் 'வன்தன் மேம்பாட்டு மைய' குழுக்கள் உருவாக்கப்பட்டு சிறு வனப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் மூலம் இச்சங்கங்களுக்குத் தேவையான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
பழங்குடியினரின் வருமானத்தைப் பெருக்க, அவர்களின் விளைபொருட்களைப் பதப்படுத்தி 'இந்திய இயற்கை' பிராண்ட் மூலம் உள்நாட்டிலும், 'தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம்' மூலம் சர்வதேச அளவிலும் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன், முதன்மை வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களைக் கணினிமயமாக்கி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294921®=3&lang=1
செய்தி அடையாள எண் 2294921
***
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2295624)
வருகையாளர் எண்ணிக்கை : 31