திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2026 4:18PM by PIB Chennai
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ், மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது.
இப்பயிற்சிகள் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிலையங்கள், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்,தொழிலாளர் பயிற்சித் திட்டம், தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் கைவினைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் விரிவான கட்டமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோட்டிக்ஸ், இணையப் பாதுகாப்பு, செமிகண்டக்டர் உற்பத்தி, பசுமைத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தொழில்துறைக்குத் தேவையான திறன்களுடன் இந்திய இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-22 முதல் 2025-26 வரை) மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்றவர்களின் மாநில வாரியான விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்திலிருந்து பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1,68,094 பேரும், மக்கள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக 79,551 பேரும், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 4,68,817 பேரும், தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் கைவினைஞர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ், 1,79,286 பேரும் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
மாநிலங்களவையில் இன்ற, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294865®=3&lang=1
(Release ID: 2294865)
***
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2295601)
வருகையாளர் எண்ணிக்கை : 45