திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
05 AUG 2026 4:16PM by PIB Chennai
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, மேம்பட்ட திறன் பயிற்சிகளை வழங்குகிறது. இச்சேவை, திறன் மேம்பாட்டு மையங்கள், நிறுவனங்களின் விரிவான கட்டமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மக்கள் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம், தொழிற்பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் வாயிலாகச் செயல்படுத்தப்படும் கைவினைஞர் பயிற்சித் திட்டம் (CTS) போன்ற பல்வேறு திட்டங்கள் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி, செமிகண்டக்டர், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா போன்ற வளர்ந்து வரும் துறைகள் உட்பட, தொழில்துறைக்குத் தேவையான திறன்களைப் பெற்று இந்திய இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
திறன் மேம்பாட்டு இயக்கத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் இருந்து பயிற்சி பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 8,45,849 ஆகவும், 3,40,277 பேர் சான்றிதழும் பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் இன்று, மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294861®=3&lang=1
(Release ID: 2294861)
***
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295598)
आगंतुक पटल : 3