அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விலங்குகள் அல்லாத அறிவியல் ஆராய்ச்சி முறைகளை ஊக்குவித்தல்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:54PM by PIB Chennai
சரிபார்க்கப்பட்ட, மனிதர்களுக்குப் பொருத்தமான, விலங்கினங்கள் அல்லாத மாதிரிகள் குறைவாகக் கிடைப்பது, மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவ சிகிச்சைக்கு முந்தைய ஆராய்ச்சிப் பணிகளின் வேகம், செயல்திறன், ஆகியவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
வழக்கமான விலங்குகள் மூலம் நடத்தப்படும் ஆய்வுகளைச் சார்ந்திருக்கும் நிலையை இது அதிகரிக்கச் செய்யும் என்றும், ஆராய்ச்சிப் பணிகளுக்கான செலவுகள், மருத்துவப் பயன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, இந்திய அறிவியல் ஆராய்ச்சி குழுமம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், நேரடிப் பணப் பரிவர்த்தனை போன்ற பல்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள ஆய்வகங்கள், மருந்து கண்டுபிடிப்பு, நச்சுத்தன்மை மதிப்பீடு, உயிர்மருத்துவ ஆராய்ச்சிப் பணிகளுக்காக, மேம்பட்ட இன்-விட்ரோ, முப்பரிமாண திசு/ஆர்கனாய்டு, செல் அடிப்படையிலான, கணக்கீட்டு அணுகுமுறைகளின் பயன்பாட்டை ஊக்குவித்து வலுப்படுத்துகின்றன.
எனினும், இந்த வழிமுறைகள் தற்போது விலங்குகளின் மாதிரிகளை முழுமையாக மாற்றுவதற்கு மாறாக, குறிப்பாக, சிக்கலான உயிரியல் ஆய்வுகளுக்கு, துணையாக உள்ளன.
சரிபார்க்கப்பட்ட விலங்குகள் அல்லாத மாதிரிகள் குறைவாகக் கிடைப்பது, மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிச் செலவுகள், மருத்துவப் பயன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கத்தை அரசு அங்கீகரிக்கிறது. அதன்படி, நாட்டில் அத்தகைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, பயன்பாட்டிற்காக ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
மாநிலங்களவையில் இன்று, மத்திய அறிவியல், தொழில்நுட்பதுறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295432®=3&lang=1
***
VJ/SV/SH
(रिलीज़ आईडी: 2295590)
आगंतुक पटल : 6