விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

ஜம்மு - காஷ்மீரில், இஸ்ரோ உதவியுடன் விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடுகள்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 2:45PM by PIB Chennai

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு  செயற்கைக்கோள் அடிப்படையிலான பயன்பாடுகளையும், விண்வெளி தொழில்நுட்பத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில், 12 செயற்கைக்கோள்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மீது கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதற்கானத் திறனைக் கொண்டுள்ளன. தொலைத்தொடர்பு, அகண்ட அலைவரிசை தகவல்தொடர்பு இணைப்பைப் பூர்த்தி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பல்வேறு சேவை வழங்குநர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பேரிடர் மேலாண்மை, விவசாயம், நீர்வளம், நகர்ப்புறத் திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகிய பணிகளுக்காக இஸ்ரோ பல்வேறுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

செயற்கைக்கோள் ஒருங்கிணைந்த நிலச்சரிவு மதிப்பீடு, எச்சரிக்கை அமைப்பு திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சோதனை நிலச்சரிவு முன்னறிவிப்புப் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. மாநில, மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்புகளுக்காக, அவ்வப்போது, தேசிய,பிராந்திய அளவிலானப் பயிலரங்குகள், பயிற்சித் திட்டங்களை இஸ்ரோ நடத்துகிறது.

ஜம்முவில் உள்ள மத்திய ஜம்மு பல்கலைக்கழகத்தில், சதீஷ் தவான் விண்வெளி அறிவியல் மையத்தை இஸ்ரோ நிறுவியுள்ளது. இங்கு, விண்வெளித் தொழில்நுட்பம் குறித்தக் கற்றலை மேம்படுத்தும் வகையில், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு இஸ்ரோவின் வசதிகள் வழங்கப்படுகின்றன.

பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைதூரக் கல்வி எளிதாக்கப்பட்டுள்ளது. தொலைமருத்துவத் திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் தொலைமருத்துவ மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் இன்று, மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங்,  எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295423&reg=3&lang=1

***

VJ/SV/SH

 


(रिलीज़ आईडी: 2295516) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी