விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளித் தொழில்நுட்ப மேம்பாடு

प्रविष्टि तिथि: 06 AUG 2026 2:46PM by PIB Chennai

இந்தியாவில் விண்வெளித் தொழில்நுட்ப உற்பத்தி, வடிவமைப்பை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விண்வெளித் துறையை விரிவுபடுத்தும் வகையில்  தாராளமயமாக்கப்பட்ட நேரடி அந்நிய முதலீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்துதல், அரசு சாராத நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவிடும் வகையில் சலுகைகளை வழங்குதல், விண்வெளித் துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் நோக்கில் ரூ.1,000 கோடி மதிப்பிலான செயல்திட்ட மூலதன நிதியத்தை ஏற்படுத்துதல், உள்நாட்டு விண்வெளித் தொழில்நுட்பங்களின் மேம்பாடு, செயல்விளக்கம், வணிகமயமாக்கல் நடவடிக்கைகளை  விரைவுபடுத்த ரூ.500 கோடி மதிப்பிலான தொழில்நுட்பத் தத்தெடுப்பு நிதியத்தை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் திட்டங்கள், முன் முயற்சிகள் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை தற்போது தொடக்கக்கட்ட  வளர்ச்சியில் இருப்பதால், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை  உருவாக்குதல், தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு உதவுதல், தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவற்றில் அரசின் நடவடிக்கைகள் முக்கியமாகக் கவனம் செலுத்தி வருகிறது.

மாநிலங்களவையில் இன்று, மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295424&reg=3&lang=1

***

VJ/SV/SH

 


(रिलीज़ आईडी: 2295508) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी