தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பள்ளியில் சாதி ரீதியிலான இழிசொற்களைக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவனை ஆசிரியர் அடித்ததுக் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2026 1:35PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்திலுள்ள உக்காவல் கிராமத்தில் 2026 ஜூலை 28 அன்று அரசுத் தொடக்கப்பள்ளியில் சாதி ரீதியிலான இழிச்சொற்களைக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்ததுக் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது தொடர்பான தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

இச்செய்தி உண்மையெனில், இது மனித உரிமைகளை மீறுவதாகும் அதனால் இது குறித்த விரிவான அறிக்கையை 2 வாரங்களுக்குள் அளிக்குமாறு மத்தியப் பிரதேச தலைமைச் செயலாளர், சிவ்புரி காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2026 ஆகஸ்ட் 1 அன்று வெளியான ஊடகச் செய்தியின் படி, பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறியதன் மூலம் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295388&reg=3&lang=1

***

 

VJ/IR/SM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2295458) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी