பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பல்வேறு சட்டங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 12:34PM by PIB Chennai
நிலம் தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசின் முதன்மை அமைச்சகமாக ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளங்கள் துறைச் செயல்படுவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே புதன்கிழமை அன்று மக்களவையில் தெரிவித்தார். இந்திய அரசியமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள பட்டியல் 2-ன் (மாநில பட்டியல்) 18-வது பதிவின் படி, நிலம், அதன் நிர்வாகம் மாநிலங்களின் சட்டமியற்றக்கூடிய, நிர்வாக அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று அத்துறைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மறுவாழ்வு நடவடிக்கைகள் பல்வேறு மத்திய, மாநில சட்டங்களின் கீழ் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது.
வன நிலங்களை வனம் சாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான முன்மொழிவுகள் https://parivesh.nic.in என்ற இணையதளம் வாயிலாகப் பரிசீலிக்கப்படுகிறது என்று மத்தியச் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295352®=3&lang=1
***
VJ/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2295457)
आगंतुक पटल : 10