பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் பகுதியில், ஷெட்யூல்டு பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்கள்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 12:37PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டம் உட்பட, நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிட மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் நேற்று (05-08-2026) பேசிய அமைச்சர், இவற்றில் சில திட்டங்கள் மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டங்களாகவும், மற்றவை மத்திய அரசின் நேரடித் திட்டங்களாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
கல்வி, வாழ்வாதாரம், திறன் மேம்பாடு, கல்வி உதவித்தொகை போன்ற 15 திட்டங்கள் இதில் அடங்கும்.
தற்போதைய நிலவரப்படி, மேற்கு வங்க மாநிலம் உட்பட நாடு முழுவதும் 508 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாநில அரசுகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை நிர்வகிக்கவும், செயல்படுத்தவும், பழங்குடியின மாணவர்களுக்கான தேசியக் கல்விச் சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295355®=3&lang=1
***
VJ/SV/SH
(रिलीज़ आईडी: 2295443)
आगंतुक पटल : 11