மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

9-வது இந்திய மருத்துவ உபகரணம் 2026 மாநாடு ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

प्रविष्टि तिथि: 05 AUG 2026 4:14PM by PIB Chennai

மத்திய ரசாயனம், உரங்கள் அமைச்சகத்தின் மருந்து உற்பத்தித் துறை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்புடன் இணைந்து 9-வது இந்திய மருத்துவ உபகரணம் 2026 மாநாட்டைப் புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. “வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி; தரமான மருத்துவ உபகரணங்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், சுகாதார நலத்துறையினர், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியாவின் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் மருத்துவ உபகரணங்கள் துறையில் எதிர்காலம் குறித்து விவாதிக்க உள்ளனர்.

2026 ஆகஸ்ட் 7 அன்று மத்திய ரசாயன, உரங்கள் துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா பட்டேல் மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294853&reg=3&lang=1

***

 

TV/IR/SM/SH

 


(रिलीज़ आईडी: 2295382) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Punjabi , Urdu